மனித உடல்களின் சரணாலயம்-இறப்பிற்கு பின் உடலுக்கு என்ன நடக்கிறது?

மனித உடல்களின் சரணாலயம்-இறப்பிற்கு பின் உடலுக்கு என்ன நடக்கிறது?

Freeman Ranch இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 ஏக்கர் பரபரப்பில் அமைந்துள்ளது. 1941 ஆண்டு இந்த பகுதி நிறுவப்பட்டது. இதை ஏதோ ஓரு சாதாரண பகுதியாக கருத வேண்டாம். இங்கு பல்வேறு நிலையில் அழுகிய 50 மேற்பட்ட மனித உடல்கள் கூண்டுகளிலும் திறந்த வெளியிலும் காணப்படுகின்றன. பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக காணப்படும் இந்த பகுதி ஒரு ஆராய்ச்சி நிலையமாக செயல்படுகிறது.

         ஆம், பல்வேறு நிலைகளில் மனித உடல் எவ்வாறு சிதைந்து போகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள தான் இவ்வாறு திறந்த வெளியில் மனித உடல்கள் கிடக்கின்றன. பல உடல்கள் முழுவதும் சிதைந்த நிலையிலும் பாதி அழுகிய நிலையிலும் கிடக்கின்றன. Argentine Forensic Anthropology Team, Baylor University இதன் ஒருபகுதி தான் இந்த மனித உடல் சரணாலயம். இவை அனைத்தும் தனமாக அளிக்கப்பட உடல்கள். பல்வேறு காலகட்டங்களில் மனித உடல் எவ்வாறு சிதைகிறது என்பதை பற்றிய ஒரு தெளிவான புரிதலிலை ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கின்றது.

       இங்கு வரும் உடற்களை வகைப்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்கு ஏற்ப திறந்த வெளியிலோ அல்லது கூண்டுகளிலோ விடப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி மனித உடல் சிதைவதற்கான பல்வேறு காரணங்களை பற்றிய தகவல்களை தருகிறது. மனித உடல் சிதைவது மூன்று நிலைகளில் நடக்கின்றது. முதலில் செல்களில் உள்ள திரவங்கள் வெளியேறுகின்றன. பாக்ட்ரியாக்களின் எண்ணிக்கை பெருகுகின்றது. இவை மனித உடல்களின் தசையை சிதைத்து நைட்ரஜன் வாயுவை வெளியிடுகின்றன.

இதனால் தான் உடல் பெரிதாக வீங்கிய நிலையில் காணப்படுகிறது. இது சில நாட்களில் ஆரம்பித்துவிடும். மேலும் பாக்ட்ரியாக்கள் சல்பரை வெளியிடுவதால் உடலானது மஞ்சள் நிறமாக மாறுகிறது. பின்னர் சிறு பூச்சிகள் மனித உடலில் அதன் முட்டைகளை ஈடுகின்றன.இவை மனித உடலை அரிக்க ஆரம்பிக்கின்றன. மனித உடலின் தசைகள் சுருங்கி உடலில் உள்ளே உள்ள திரவத்தை வெளியேற்றுகின்றன. நைட்ரஜன் நிறைந்த இந்த திரவம் அருகில் உள்ள புற்களை அழித்து கருப்பு நிறத்தை உருவாக்குகிறது. கடைசியாக மனித உடலின் அணைத்து தசைகளும் அரிக்கப்பட்டு எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன. இந்த பகுதியின் பெரும்பாலான உடல்கள் இந்த நிலையில் தான் காணப்படுகின்றன. 
இந்த பகுதி மிகுந்த கண்காணிப்புடன் பாதுகாப்பாக உள்ளது. தடயவியல் துறையில் இந்த ஆராய்ச்சி மிக முக்கிய பங்கு வகித்தாலும் பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் இது சிறிது பயத்தை அளிப்பது நிஜம்.

Comments

Popular posts from this blog

ROPOSO APP இந்த APP மூலமாக தினமும் குறைந்தது 25ரூபாய் Paytmல் சம்பாதிக்கலாம்

சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..!