சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..!


சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..!

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இதனிடையே, இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட, மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பொது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டனர். அவர்களும், அதன் பின்னணியில் இருப்பவர்களும், இதற்காக மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டது, என்று பகிரங்கமாக தெரிவித்தார். அண்டை நாடு என பாகிஸ்தானையும் மறைமுகமாக மோடி குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் ஒருவர், அண்டை நாட்டுக்கு எதிராக பகிரங்கமாக இவ்வாறு பேசியது இதுதான் முதல் முறையாகும். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் அறிவித்துள்ளதை வைத்து பார்த்தால், இது, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின், பகிரங்க போர் பிரகடனம் என்று கூறுகிறார்கள் ராணுவத்துறை வல்லுநர்கள்.

நெருங்கும் தேர்தல் நெருங்கும் தேர்தல் இந்தியாவில் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதலை எளிதாக விட்டுவிட முடியாத நிலையில், மோடி அரசு உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக தைரியமான முடிவை எடுக்கவில்லை என்ற விமர்சனத்தோடு மக்களை சந்தித்து வாக்கு கேட்பதை மோடி விரும்பவில்லை. எனவே பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்க இந்தியா ரெடியாகியுள்ளதாக தெரிகிறது.

Comments

Popular posts from this blog

ROPOSO APP இந்த APP மூலமாக தினமும் குறைந்தது 25ரூபாய் Paytmல் சம்பாதிக்கலாம்