'வெக்கை' நாவல் தான் 'அசுரன்'


'வட சென்னை' படத்திற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'அசுரன்'. இப்படம் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி, 1982ம் ஆண்டு எழுதிய நாவல்தான் 'வெக்கை'. 15 வயது சிறுவன் ஒருவன், கொலை செய்கிறான். பின்னர் அப்பாவுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். நீதிமன்றத்தில் சரணவடைவதற்கு முன்பு அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பயணிக்கிறது என்பதுதான் அந்த நாவலின் கதை. அரசியல், சாதி, உறவு முறைகள், பாசம் என நகரும் இந்த நாவல் பலருக்கும் பிடித்த ஒரு நாவல்.

நாவலை படமாக்கப் போவதாக அதன் எழுத்தாளர் பூமணியிடம் எப்போதே சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். 'பொல்லாதவன், வட சென்னை' படங்களில் சென்னையைக் கதைக்களமாக வைத்த வெற்றிமாறன், 'ஆடுகளம்' படத்தில் மதுரையைக் கதைக்களமாக வைத்தார். 'வெக்கை' நாவல் கரிசல் மண்ணைக் கதைக்களமாகக் கொண்ட கதை. 

'அசுரன்' படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க உள்ளதாக மட்டுமே தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான அப்பா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. 'அசுரன்' படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான தடத்தைப் பிடிக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog

ROPOSO APP இந்த APP மூலமாக தினமும் குறைந்தது 25ரூபாய் Paytmல் சம்பாதிக்கலாம்

சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..!