கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் வைத்த மனைவி கைது
மும்பை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகினறனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞாயிறன்று சோதனை நடத்தி 3 இளம் பெண்களை மீட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சவீதா பாரதி,43 என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். பைசர் போலீஸ் நிலையத்தில் வைத்து சவீதாபாரதியிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனது கணவர் உள்ளிட்ட பலரை கொன்று புதைத்துள்ள திடுக் தகவல் வெளியானது. .
உடன் அவரது வீட்டினை செவ்வாயன்று சோதனை நடத்தியதில் செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலத்தை மீட்ட போலீசார் அது ஆண் சடலம் என்பதும் அவர் சவீதாவின் கணவர் ஷாதேவ் 49 என்பதும் தெரியவந்தது.
சினிமாவை மிஞ்சிய இந்த திகில் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கிரண்கபாடியா கூறுகையில், சவீதா பாரதி தனது கணவர் ஷாதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.. சவீதாபாரதிக்கு கமலேஷ் என்வருடன் இருந்த கள்ளகாதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது கடந்த 2004-ம் ஆண்டு கணவர் ஷாதேவ், குடிபோதையில் இருந்த போது மனைவி சவீதா பாரதி, தனது கள்ள காதலனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அடித்து கொன்று செப்டிக்டேங்கில் புதைத்து வைத்ததுள்ளார். மேலும் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர்கள் உடலை தேடிவருகிறோம்.இவ்வாறு கிரண் கபாடியா கூறினார்.கைதான சவீதா பாரதியை போலீசார் நேற்று பல்கார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments
Post a Comment